இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?

India vs Pakistan: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மறுபுறம் இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. கடைசியாக நடைபெற்ற சில இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற்று இருந்தது. தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பிளேயிங் லெவனில் பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றமும், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து கேப்டன் ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. மேலும் மிடில் ஆர்டரில் அதிக டாட் பால்களை விளையாடியதால் பாகிஸ்தான் அணியால் தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. 49 ஓவரில் பாகிஸ்தான அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி அபார வெற்றி

242 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிலையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடித்த நிலையில் அப்ரீடியின் யார்கரில் அவுட்டானார். அதன் பிறகு கில் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சும்மான் கில் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒரு நல்ல பாட்னர்ஷிப் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி வரை விளையாடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். மேலும் இந்த போட்டியில், ஒருநாள் தொடரில் 14000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது பாகிஸ்தான் அணி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.