லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 92 சதவீதம் அளவுக்கு மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட், பயணிகள் ரெயில்கள் மற்றும் மெமு சேவைகளும் செயல்படுகின்றன. இவற்றுடன் 472 ராஜ்தானி மற்றும் 282 வந்தே பாரத் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பாதி ரெயில்கள் உத்தர பிரதேசத்தில் இருந்தும், 11 சதவீதம் டெல்லியில் இருந்தும், 10 சதவீதம் பீகாரில் இருந்தும், 3 முதல் 6 சதவீதம் மராட்டியம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
இந்த ஒன்றரை மாத காலத்தில் 12 முதல் 15 கோடி பக்தர்கள் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். தொடக்கத்தில் இருந்து இதுவரை 13,667 ரெயில்கள் பிரயாக்ராஜ் மற்றும் அதனருகேயுள்ள ரெயில் நிலையங்களை வந்தடைந்துள்ளன.