டாஸ் ஜெயித்தால் இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? பிட்ச் ரிப்போர்ட் இது தான்!

India vs Pakistan: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். அதில் இந்திய அணி வெற்றியும், பாகிஸ்தான அணி தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இன்று தோல்வி அடையும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் அவர்கள் வெளியேறினால் மிகவும் அவமானமாக இருக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி

கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடினர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பைனலில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் அதற்கு இந்திய அணி பழி தீர்க்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய சில போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 1952 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போட்டி நிலவி வருகிறது. சில அரசியல் காரணங்களாலும் இரு அணிகளும் விளையாடும் விளையாட்டுப் போட்டிகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இன்றும் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று முன்னணி வீரர்கள் கூறுகின்றனர். இந்திய அணியில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லை. குறிப்பாக பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெறும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால் யார் டாஸ் வெற்றி பெற்றாலும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல காற்றின் வேகமும் குறைவாக உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இந்தியா vs பாகிஸ்தான் உத்ததேச ப்ளேயிங் 11

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான்? பாபர் ஆசாம், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (c/wk), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.