சென்னை வரும் மார்ச் 14 அன்று கார்த்தி நடித்த ஆயிறத்தில் ஒருவன் படம் மீண்டும் வெளியாகிறது. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக பாராட்டு கிடைத்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. அதேநேரம், இப்படம் தெலுங்கில் ‘யுகனிக்கி ஒக்கடு’ என்கிற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆச்சரியமாக காலம் செல்லச் […]
