இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நேரில் செல்ல முடியாதவர்கள் எப்படியாவது டிவிகளிலும், ஒடிடி தளங்களிலும் கண்டு களிப்பது வழக்கம். இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 242 இலக்குடன் இலக்குடன் இந்திய அணி சேச்சிங் செய்து வருகிறது. இந்த போட்டியை நேரில் காண பல நட்சத்திரங்களும் துபாய்க்கு வந்திருக்கின்றனர்.
இந்த போட்டியை எம்.எஸ்.தோனி விளம்பரப் படப்பிடிப்பு தளத்தில் அந்த படபிடிப்புக் குழுவினருடன் அமர்ந்து பார்த்து வருகிறார். அந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

போட்டியை நேரில் காண திரைப்பட பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் துபாய் சர்வதேச மைதானத்திற்கு நேரில் சென்றுள்ளனர். கிரிக்கெட் பிரபலங்களான ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண துபாய் சர்வதேச மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சில திரைத்துறை பிரபலங்களும் இந்தப் போட்டியை நேரடியாகக் காண துபாய் சர்வதேச மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். பிரபல பாலிவுட் ஹீரோயின் சோனம் கபூர் அவருடைய கணவரான ஆனந்த் அஜுஜா உடன் வருகை தந்துள்ளார். புஷ்பா திரைப்படத்தின் இயக்குநர் சுகுமார் அவருடைய குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.

மேலும் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ஜீவா, இயக்குநர் வெங்கட் பிரபு, பிரபல பிரிட்டன் பாடகி ஜாஸ்மின் வாலியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரபல பின்னணிப் பாடகர் அதிஃப் அஸ்லம் போன்ற பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.