திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) ஆனந்த விகடன் மற்றும் கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் UPSC/TNPSC குரூப் 1,2 தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இந்த நிழச்சிக்கு திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருவாரியானவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி வழங்கும் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship Test வைக்கப்பட்டது. அந்தத் தேர்வில் அங்கு வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அதன்பிறகு, கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கவேண்டும், தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும், என்னென்ன போட்டித் தேர்வுகள் உள்ளன என்று பல்வேறு விசயங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதன்பிறகு நடைபெற்ற இலவசப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ் கலந்துகொண்டு, தான் முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி தேர்வில் வென்றதைப் பகிந்துகொண்டார். தன் தந்தையை தனது பத்து வயதில் இழந்தாலும், தாய் கொடுத்த அரவணைப்பு மற்றும் ஊக்கத்தில் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று குறிக்கோளை நெஞ்சில் நிறுத்தி, இந்த தேர்வில் வெற்றிப் பெற்றதாக அவர் கூறிய அனுபவம் மாணவர்களுக்குத் தக்க பாடமாக மாறியது.

அதனைத்தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship Test-ல் வெற்றிப்பெற்றவர்களின் முதல் பத்து பேர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கினார். மீதியுள்ள தேர்வானவர்களுக்கு தகவல் அனுப்பபடும் என்று கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வில் வெல்ல வேண்டும், அதற்காக எப்படி தயாராவது என்று குழப்பத்துடன் வந்த தங்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல வழிகாட்டியாக அமைந்தது என்று அங்கு வந்த மாணவர்கள் தெரிவித்தனர். மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel