புதுடெல்லி: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை அமெரிக்க அரசு வெளியேற்றி வருகிறது.
அமெரிக்காவின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வரும் வேளையில் சுமார் 50 இந்தியர்கள் அண்மையில் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இவர்களில் 12 இந்தியர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இஸ்தான்புல் வழியாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தனர்.
இதற்குமுன் 3 குழுவினரும் விலங்கிடப்பட்டு கைதிகளை போல அழைத்து வரப்பட்டாத புகார் எழுந்த நிலையில், அவ்வாறு இல்லாமல் இந்தியா வந்த சேர்ந்த முதல் குழு இதுவாகும். இவர்களில் 4 பேர் பஞ்சாபில் இருந்தும் தலா 3 பேர் ஹரியானா மற்றும் உ.பி.யில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் எனத் தெரியவந்தது.