சென்னை: போராட்டம் அறிவிப்பு எதிரொலியாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் தருவோம் என வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளன. இதையடுத்து,அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காண, அமைச்சர்கள் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் […]
