விராட் மாதிரி ஆடத்தெரியாதா? முட்டாள் மாதிரி ஆடுற – பாகிஸ்தான் பிளேயரை விளாசிய சோயிப் அக்தர்

Shoaib Akhtar | இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணியை முட்டாள் தனமாக தேர்வு செய்திருப்பதாகவும், மூளையற்றவர்கள் கூட இப்படியான அணியை தேர்வு செய்திருக்கமாட்டார்கள் எனவும் சோயிப் அக்தர் கடுமையாக விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால், அந்த அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் அந்த அணி தோல்வியை தழுவியிருந்தது. இதனால் சோயிப் அக்தர் கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மீது வைத்துள்ளார்.

சோயிப் அக்தர் பேட்டி

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தபிறகு பேசியிருக்கும் சோயிப் அக்தர், ” பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்றபிறகு நான்  சிறிதும் ஏமாற்றமடையவில்லை. இதனை நான் எதர்பார்த்திருக்கவே செய்தேன். ஏனென்றால் என்றால் அப்படியான ஒரு அணி தான் பாகிஸ்தான் அணி. உலகம் முழுவதும் 6 பந்துவீச்சாளர்களுடன் விளையாடும்போது நீங்கள் குறைந்தபட்சம் 5 பந்துவீச்சாளர்களையாவது அணியில் வைத்திருக்க வேண்டாமா?.  இருக்கும் பந்துவீச்சாளர்களில் இரண்டுபேர் ஆல்ரவுண்டர். இந்த லட்சணத்தில் எப்படி இந்திய அணியை வெற்றிபெற முடியும். 

பிசிபி மீது கடும் விமர்சனம்

நான் உண்மையிலேயே மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அணி நிர்வாகத்தைப் போலவே வீரர்களும் அறியாமையில் இருப்பதால், வீரர்களைக் குறை கூற முடியாது. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரோஹித், விராட் மற்றும் சுப்மான் போன்ற திறமையான பிளேயர்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை. வீரர்களுக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ எதுவும் தெரியாது. பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தெளிவான திசை இல்லாமல் விளையாட சென்றுள்ளனர். யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. முட்டாள்களும், மூளையற்றவர்களும் உருவாக்கிய அணியாக இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணி இருக்கிறது. பாகிஸ்தான் அணி என்றாலே விராட் 100 சதவீதம் சதம் அடிப்பார், அவர் 100 சதம் அடிக்கக்கூடிய பிளேயர். அதனை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என காட்டமாக பேசியுள்ளார்.

 

மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.