Dragon: "கடைசி 20 நிமிடங்கள் கண் கலங்கச் செய்தது'' – 'டிராகன்' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

`ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “`டிராகன்’ – அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது. தான் ஒரு அதிரடியான என்டர்டெயினர் என்பதையும் வலிமையானவர் என்பதையும் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

இதுமட்டுமல்ல பிரதீப் ஒரு நல்ல பெர்பாமெரும்கூட. இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியம் ஆகியோர் மனதில் நிலைத்திருக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்து `ஜென் – சி’ மற்றும் மில்லினியல் கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கச் செய்தது. இந்த உலகத்தில் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படம் சொல்லும் மெசேஜ் மிகவும் முக்கியமானது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இவரின் பாராட்டுக்கு நன்றி சொல்லிப் பதிவிட்டிருக்கும் பிரதீப் ரங்கநாதன், “சார் உங்களின் திரைப்படத்தைப் பார்த்து வளர்ந்த, உங்களைப் பார்த்து வியந்த, உங்களை முன்னுதாரணமாகக் கொண்ட ஒரு பையனுக்கு இப்படியான பாராட்டுகள் குறித்து கனவிலும் நினைத்ததில்லை.

நீங்கள் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்) என்னைப் பற்றிப் பேசுவது நம்ப முடியாத கனவு. என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை” எனப் பதிவிட்டிருக்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.