மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற ஸ்கார்பியோ-என் மாடலின் விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் கார்பன் எடிசன் ₹ 19,19,400 முதல் ₹ 24,89,100 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷனில் தொடர்ந்து வழங்கப்படுகின்ற ஸ்கார்பியோ-என் மாடலில் Z8 and Z8L வேரியண்டின் அடிப்படையில் மேனுவல் , ஆட்டோமேட்டிக் ஆப்ஷனுடன் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது.
கார்பன் எடிசனில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இன்டீரியரில் கருப்பு, கிரே நிறத்துடன் சில இடங்களில் சில்வர் நிற கார்னிஷ் இடம்பெற்று வெளிப்புறத்தில் முழுமையான கருப்பு நிறத்துடன் அலாய் வீல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருமை உள்ளது. மற்றபடி அடிப்படையான வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சாதரன வேரியண்டுகளை விட ரூ.20,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
Variant | Petrol | Diesel | ||||
MT | AT | 2WD MT | 2WD AT | 4WD MT | 4WD AT | |
Z8 | ₹19,19,400 | ₹20,70,000 | ₹19.64,700 | ₹21,18,000 | ₹21,71,700 | ₹23,44,100 |
Z8 L | ₹ 20,89,500 | ₹22,31,200 | ₹21,29,900 | ₹22,76,100 | ₹23,33,100 | ₹24,89,100 |
தொடர்ந்து இந்த மாடலில் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உள்ளது.