பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ரோஹ்மன் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதோடு கடந்த 2023ம் ஆண்டு திடீரென ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதாசென்னுடன் விடுமுறையை கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. லலித் மோடி வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து சுஷ்மிதா சென் வளர்த்து வருகிறார். அதோடு அவருக்கு கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆபரேசனும் செய்து கொண்டார். விரைவில் 50வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவ் ஷோவில் ரசிகர்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர், ஜெய்ப்பூர் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
உடனே ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சுஷ்மிதா சென், எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசைதான். ஆனால் சரியான பார்ட்னர் கிடைக்கவேண்டியது அவசியம். திருமணம் சாதாரண ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது. திருமணம் காதலோடு, இதயங்கள் இணையக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். அது போன்ற ஒரு உணர்வு இதயத்தைத் தொடும்போது திருமணம் செய்து கொள்வேன்”என்று குறிப்பிட்டார்.
லலித் மோடியுடனான உறவு குறித்து சோசியல் மீடியாவில் சுஷ்மிதா சென் வெளியிட்டு இருந்த பதிவில் குறுகிய கால காதல் என்றும், இதுவும் தனது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.