Sivakarthikeyan:“சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனா, எனக்கு..'' – ஷாம்

நடிகர் ஷாம் நடித்திருக்கும் `அஸ்திரம்’ திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாம் பேசுகையில்,“நல்ல இயக்குநரோட நல்ல கதையில நடிச்சிருக்கேன்னு ஒரு திருப்தி இருக்கு. `அஸ்திரம்’ படம் என்னோட அடுத்தக்கட்ட கரியருக்கு பிரமாஸ்திரமாக இருக்குமானு மார்ச் 7-ம் தேதி தெரிஞ்சிடும். கரியர் தொடங்கும்போது நடிகராகணும்னு வந்தேன். அந்த நேரத்துல இயக்குநர் ஜீவா சார் `12பி’ படத்தோட வாய்ப்பைக் கொடுத்தாரு. அப்போ எனக்கு வேற எந்த அனுபவமும் இல்ல. சில தவறுகள் நடந்தது. அதை எதிர்மறையாக எடுத்துக்கிட்டு மனச்சோர்வுக்குள்ள போகிற நபர் நான் கிடையாது. `வாரிசு’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். இதுமட்டுமல்ல,. துரை செந்தில்குமார் சார் டைரக்ஷன்லையும் நான் நடிச்சிட்டு இருக்கேன். `12பி’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களை நான் சைன் பண்ணினேன். அந்தத் தவறை இப்போ பண்ணக்கூடாதுனு நான் தெளிவாக இருக்கேன். ” என்றவர், “ நான் கோட்டை விட்டுடேன்னு சொல்லமாட்டேன். எல்லோருக்கும் சினிமாவுல நேரமும் வெற்றியும் அமையணும்.

நடிகர் ஷாம்

சினிமாவின் தொடக்கத்துல எனக்கு பெரிய பயணம் அமையல. 3 வருடம் முயற்சி பண்ணினேன். அதன் பிறகு எனக்கு சினிமாவுல வாய்ப்புக் கிடைச்சது. இன்னைக்கு இருக்கிற பலர் சினிமா பயணத்தோட தொடக்கத்துல பல கடினங்களை சந்திச்சிருக்காங்க. இதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயனைச் சொல்லலாம். தொலைக்காட்சி பக்கம் கடினமாக உழைச்சு, கஷ்டப்பட்டுதான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்காரு. என்னோட கரியரின் தொடக்கத்துல எனக்கு வழிகாட்டி இல்ல. அந்த சமயத்துல எனக்கு எந்த பின்புலமும் இல்ல. இதை நான் குறையாக சொல்லமுடியாது. அதெல்லாம் தெரிஞ்சுதான் நான் சினிமாவுக்கு வந்தேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் போட்டியாளாராக இருந்த நிகழ்ச்சியில நான் நடுவராக இருந்திருக்கேன். அந்த நேரத்துலயே நான் அவர்கிட்ட `உன்னோட காமெடி சென்ஸ் நல்லா இருக்கு. குழந்தைகளுக்கு உன்னை ரொம்ப பிடிக்குது’னு சொல்லியிருக்கேன். சிவகார்த்திகேயனோட வளர்ச்சி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

நடிகர் ஷாம்

ஆனா, அன்னைக்கே நான் அதை கணிச்சேன். நான் `குஷி’ திரைப்படத்துல விஜய் அண்ணனோட ஒரு சீன்ல நடிச்சேன். அதன் பிறகு மூணு வருஷத்துல நான் ஹீரோவாக ஒரு படத்துல நடிச்சேன். அதே மாதிரிதான் இன்னைக்கு சிவகார்த்திகேயனும். இதை ஒப்பிட்டு பார்க்காமல் சந்தோஷமாக, முழு மனநிறைவோட படங்கள் பண்ணனும். வாழ்க்கையில எல்லோருக்கும் போராட்டங்கள் இருக்கும். எனக்கும் அது இருந்தது. அதை நேர்மறையாக எடுத்துட்டு கடந்து வர்றேன்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.