சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக அரசு பணிகளின் பெரும்பாலான துறைகளில் தற்காலிக பணியாளர்களே நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அரசு பணிகள் முழுமை பெறாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், […]
