பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இயின் வரைவு பட்டியலில் பஞ்சாபி மொழி இடம்பெறாதது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பஞ்சாபி மொழி ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய உத்தரவின்படி, பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி – PSEB), […]
