புதிய கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழி கொள்கைக்கு மாறாவிட்டால் மத்திய அரசிடமிருந்து ரூ.2,400 கோடி நிதியைப் பெற முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த இரு வாரங்களுக்கு முன் கூறியிருந்தார். மத்திய அரசு அதன் புதிய கல்விக் கொள்கையில் “உறுதியாக” உள்ளது, அதற்காக “… சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். மத்திய கல்வி அமைச்சரின் கருத்து “பிளாக் மெயில்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தார், மேலும் […]
