IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் – போட்டிகள் முழு விவரம் இங்கே!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சியை மேற்கொள்வற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை வர ஆரம்பித்துவிட்டார்கள்.

IPL 2025

அந்தவகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ், முன்னாள் கேப்டன் தோனி, முகேஷ் சௌத்ரி, ராம கிருஷ்ணா கோஷ், குர்ஜப்னீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த், அன்ஷுல் கம்போஜ் போன்ற வீரர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்கள். தீவிர பயிற்சியை மேற்கொண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சிஎஸ்கே வீரர்கள் இருக்கின்றனர். சென்னையில் மட்டும் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன.

அந்தவகையில் மார்ச் 23 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுடனும் மார்ச் 28 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடனும், ஏப்ரல் 5 ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸுடனும், ஏப்ரல் 11 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனும், ஏப்ரல் 25 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடனும் ஏப்ரல் 30 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸுடனும் மே 12 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத இருக்கிறது.

IPL 2025

சென்னை தவிர்த்து பிற இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளை மற்ற அணிகளுடன் எதிர்கொள்ள இருக்கிறது. அதாவது மார்ச் 30 ஆம் தேதி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸுடனும், ஏப்ரல் 8 ஆம் தேதி சண்டீகரில் பஞ்சாப் கிங்ஸுடனும், ஏப்ரல் 14 ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடனும் சிஎஸ்கே அணி மோத இருக்கிறது. தவிர ஏப்ரல் 20 ஆம் தேதி மும்பையில் மும்பை இந்தியன்ஸுடனும் மே 3 ஆம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸுடனும், மே 7 ஆம் தேதி கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனும், மே 18 ஆம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸுடனும் சிஎஸ்கே அணி மோத இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.