திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில் கலந்துகொண்டு திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை பிப். 25ம் தேதி இரவு அதேபகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கஞ்சா மற்றும் குடிபோதையில் இருந்த நபர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கியதாக […]
