சென்னை சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில்இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்தத மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து […]
