சென்னை தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை காரணமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. ஆனால் காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிகம் பதிவாகி வருகிறது. அதே வேளையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
