அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘நீங்கள் கொடுத்த அன்பு விலைமதிப்பற்றது.’ என ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

அதில், ‘எனக்கும் டிராகனுக்கும் இந்த பல்லவிக்கும் கிடைக்கும் அன்பும் ஆதரவும் மிகையான உணர்வை கொடுக்கிறது. தியேட்டரில் நீங்கள் எனக்காக அடிக்கும் விசிலும் இன்ஸ்டாவில் நீங்கள் எனக்காக செய்யும் ரீல்ஸ்களும் எடிட்களும் மற்றும் அழகான கமெண்ட்களையும் பார்க்கையில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.
நான் தமிழ் பொண்ணு இல்ல. எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பு விலை மதிப்பற்றதாக இருக்கிறது.

நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பை என்னுடைய படங்கள் மூலம் உங்களுக்கு திருப்பிக் கொடுப்பேன். நீங்கள் பெருமைப்படுமாறு நடந்துகொள்வேன்.’ எனப் பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
