ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்தாகுமா? ஆனால் எந்த அணி அரைஇறுதிக்கு செல்லும்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற சூழ்நிலை உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரை இறுதிக்குள் நுழையும். 

அதேசமயம் இப்போட்டியில் தோல்வியடையும் அணி உறுதியாக அரைஇறுதி வாய்பை இழந்துவிடும். இச்சூழலில் இப்போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிங்க: IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை – என்ன காரணம்?

இப்போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற உள்ளது. போட்டியின்போது இன்று மாலை 6 அல்லது 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கின்றன. லாகூர் மைதானத்தில் மழை பெய்தால் மழை நீரை வெளியேற்றுவதற்கு கடினமாக இருக்கும். எனவே இப்போட்டியின்போது மழை பெய்தால் நிச்சயமாக போட்டியானது கைவிடப்பட வாய்ப்புள்ளது. 

போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்

அப்படி ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால் எந்த அணி அரை இறுதிக்குள் நுழையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா ஒரு வெற்றி மற்றும் மழையால் கிடைத்த ஒரு புள்ளியுடன் மொத்தம் மூன்று புள்ளிகளுடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் உள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்போது ஆஸ்திரேலியா அணி 4 புள்ளிகளுடனும் ஆப்கானிஸ்தான் அணி 3 புள்ளிகளுடனும் இருக்கும். அப்படி இருக்கையில் ஆஸ்திரேலியே அணியே அரை இறுதிக்குள் நுழையும். 

அதேபோல், தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகின்றன. அதில் இங்கிலாந்து வென்றால் தென் ஆப்பிரிக்கா தற்போதுள்ள 3 புள்ளிகளுடன் இருக்கும். அப்படி இருக்கையில் தென் ஆப்பிரிக்கா அணியே நெட் ரன் ரேட்டின் அடிப்படையில் அரை இறுதிக்குள் நுழையும். எனவே இன்று நடைபெறும் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.