ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் குரூப் – பி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் பேட் செய்து ஆப்கானிஸ்தான் 274 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது.
ICC Champions Trophy 2025: அய்யோ பாவம் ஆப்கானிஸ்தான்
இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 109 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து கனமழையால் போட்டியில் முடிவு ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
மூன்று போட்டிகளையும் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான போட்டியும், இன்றைய போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டதால் தலா 1 புள்ளி என மொத்தம் 4 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
ICC Champions Trophy 2025: தென்னாப்பிரிக்காவுக்கே அதிக வாய்ப்பு
தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் மழையால் போட்டி ரத்தானது என மொத்தம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 1 வெற்றி, 1 தோல்வி, 1 போட்டி மழையால் ரத்து என 3 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ளது.
முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்குச் செல்லும் என்பதால் தற்போது ஆஸ்திரேலியா அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. தென்னாப்பிரிக்கா அல்லது ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமே இன்னும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து போட்டியே எந்த அணி அரையிறுதிக்குச் செல்லும் என்பதை உறுதிசெய்யும்.
ICC Champions Trophy 2025: ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கா?
ஆப்கானிஸ்தான் அணி 99% நாக்-அவுட்டாகிவிட்டது எனலாம். காரணம், நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டும். அதுவும் இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்தால் 207 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது பேட்டிங் செய்தால் 11.1 ஓவர்களில் இலக்கை அடித்தும் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டும். அதாவது இந்த இரண்டு நிகழ்வுகளிலும் முதல் இன்னிங்ஸிஸ் 300 ரன்கள் என எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ICC Champions Trophy 2025: யாருக்கு முதலிடம்?
எனவே, தென்னாப்பிரிக்கா அணி தோற்றாலும் இந்த கணக்கீட்டை முறியடித்தாலே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடலாம். ஒருவேளை, நாளைய போட்டியும் மழையல் ரத்து செய்யப்பட்டால் தென்னாப்பிரிக்கா அணி 1 புள்ளியை பெற்று அரையிறுதிக்கு எளிதாக முன்னேறிவிடும். குரூப் பி-யில் யார் முதலிடம் பிடிப்பார்கள், யார் இரண்டாம் இடம்பிடிப்பார்கள் என்பது நாளைய போட்டிக்கு பின்னரே தெரியவரும். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலோ, போட்டி மழையால் ரத்தானாலோ தென்னாப்பிரிக்கா நெட் ரன்-ரேட் அடிப்படையில் முதலிடம் செல்லும். இதற்கே 90% வாய்ப்பும் இருக்கிறது. எனவே, ஆஸ்திரேலியா இரண்டாம் இடம் செல்லும்.
ICC Champions Trophy 2025: IND vs AUS – அரையிறுதியில் மோதலா?
அந்த வகையில், குரூப் ஏ-வில் எந்த அணி முதல் இடத்தை பிடிக்கும் என்பது இந்தியா – நியூசிலாந்து போட்டியின் முடிவிலேயே தெரியும். ஒருவேளை நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தை பிடித்துக்கொள்ளும்பட்சத்தில், இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி முதலிடம் பெற்றால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடலாம். எதுவாக இருந்தாலும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs NZ: ரோகித் சர்மா வெளியே? அவருக்கு பதில் யார்? பிளேயிங் 11 இங்கே