தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை என்றும் தமிழ்நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மொழிப் போரையும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையையும் கழகத் தோழர்கள் வலிமையோடு எதிர்க்க உறுதி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : “தமிழ்நாடு உயிர் பிரச்சினையான மொழிப்போரையும் – தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது” “தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது […]
