ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காமெட் EV மின்சார பேட்டரி வாகனத்தில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்று பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.9.81 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக BAAS எனப்படுகின்ற பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் + ஒரு கிமீ பயணத்துக்கு ரூ. 2.50 காசுகள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாக்ஸ்ட்ராம் எடிசன் பேட்ஜ், வீல் கவர்கள் மற்றும் ஹூட் பிராண்டிங் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் போன்றவற்றுடன் சில இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட், கேபினும் அடர் கருப்புடன் சில இடங்களில் சிவப்பு நிற இன்ஷர்ட் உள்ளது.
காமெட் இவி 42 PS பவர், 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் மூலம் முழுமையாக சிங்கிள் சார்ஜில் 230 கிமீ பயணிக்கின்ற வரம்பை கொண்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உள்ள நிலையில், பயன்பாட்டில் பொதுவாக 150-180 கிமீ வரை ரேஞ்ச் கிடைத்து வருகின்றது.
3.3kW AC சார்ஜிங் ஆப்ஷன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 7 மணி நேரமும், 0-80 % பெற 5.5 மணி நேரமும் எடுத்துக் கொள்ளுகின்றது.
புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுகின்ற வேரியண்டுகளின் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 3.5 மணி நேரமும், 0-80 % பெற 2.8 மணி நேரமும், 10-80 % பெறுவதற்கு 2.5 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.