இஸ்லாமாபாத்,
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தலிபான் ஆதவு மதகுருமார்கள் மையத்திற்குள் உள்ள ஒரு மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 5 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :