6 ஏர்பேக்குடன் பாதுகாப்பான காராக மாறிய மாருதி ஆல்டோ K10

2025 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி ஆல்டோ கே10 காரில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மாடல் ரூ.6,000-ரூ.16,000 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.4.23 லட்சம் முதல் துவங்குகின்றது. எஞ்சின், தோற்ற அமைப்பு, வசதிகள், மற்றும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ஆல்டோ கே10 காரில் தொடர்ந்து 1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm டார்க்கினை 3500 rpmல்  வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் உள்ள மாடல் லிட்டருக்கு 24.39 கிமீ மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 24.90 கிமீ கொண்டவை இணைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 55 hp பவரை 5300 rpm மற்றும் 82 Nm டார்க்கினை 3200 rpmல்  வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 33.40 கிமீ ஆகும்.

ஆல்டோ K10 காரின் பாதுகாப்பு வசதிகளில், மிக முக்கியமான 6 ஏர்பேக்குகள் உடன் அடிப்படையான பாதுகாப்பை மேம்படுத்த 3-புள்ளி பின்புற  இருக்கை பெல்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்+ (ESP®), ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) மற்றும் 15+ மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

2025 மாருதி ஆல்டோ K10 விலை பட்டியல்

  • STD MT – ₹ 4,23,000
  • LXI MT – ₹ 4,99,500
  • LXI S-CNG – ₹ 5,89,500
  • VXI MT – ₹ 5,30,500
  • VXI AGS – 5,80,500
  • VXI S-CNG – ₹ 6,20,500
  • VXI+ MT – 5,59,500
  • VXI+ AGS – 6,09,500

(எக்ஸ்-ஷோரூம்)

மாருதி சுசூகி ஆல்டோ கே10 6 airbag

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.