ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வங்கி மற்றும் நிதி துறையில் டிப்ளமோ படிப்பு படிக்க வேண்டும்.
அதன் பின்னர், 2 மாதங்களுக்கு இன்டர்ன்ஷிப்பும், அடுத்த, 4 மாதங்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படும்.
இதன் பின்னர், ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி வழங்கப்படும்.
மொத்த காலிபணியிடங்கள்: 650
வயது வரம்பு: 20 – 25 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆண்டுக்கு ரூ.6.14 லட்சத்திலிருந்து 6.50 லட்சம் வரை கிடைக்கும்.

தகுதிகள்: எந்த டிகிரி வேண்டுமானாலும் படித்திருக்கலாம். கணினி திறன் வேண்டும் மற்றும் மாநில மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு.
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் தேதி: மார்ச் 1, 2025 – மார்ச் 12, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.idbibank.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.