`ஜோ’ படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
தேசிங்கு பெரியசாமி பேசுகையில், “ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யுத்ஃபுல்லாக இருக்கு. படத்தினுடைய டிரெய்லரும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சு. நல்ல வைப் இருக்கு. ரியோவுடைய கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது நம்ம ஊரின் கலர். யுவன் சாருக்காகத்தான் இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கேன். `STR -50′ படம் நடக்கிறதுக்கு முக்கிய காரணமே யுவன் சார்தான். நான் யுவன் சார்கிட்ட கதை சொன்னேன். அவர் பதிலாக எதுவும் கேட்காமல். `எப்போ வேலையை ஆரம்பிக்கிறோம்’னுதான் கேட்டாரு. அவர் சிம்பு சாருக்கு கால் பண்ணி பேசி ஒரு ஊக்கம் கொடுத்தாரு. கிட்டதட்ட `STR -50′ திரைப்படம் டிராப்தான். இப்ப அந்தப் படம் நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான். எங்களுக்கு அவர் தெம்பாக இருந்தாரு” என்றார்.

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய இளன், “யுவன் சாருக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். யுவன் சாருக்காக உயிரைக்கூட கொடுப்பேன்னு இப்போதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிகிட்ட பேசிட்டு இருந்தேன். யுவன் சார் ஒரு ப்ரஷ் ஸ்டார்ட் மாதிரி. நான் `ப்யார் ப்ரேமா காதல்’ படத்துக்கு முன்னாடி ஒரு படம் பண்ணினேன். அந்தப் படம் ரிலீஸே ஆகல. அப்போ நான் கொஞ்சம் டவுன்ல இருந்தேன். எப்போ யுவன் சாரை சந்திச்சேனோ, அப்போவே எல்லாம் மாறிடுச்சு. அந்த மேஜிக் அவர்கிட்ட இருக்கு. யுவன் சாருக்கு `டிரக் டீலர், மார்டன் மேஸ்ட்ரோ, கிங்’னு பல பெயர்கள் இருக்கு. அவருக்கு தெரிஞ்சவங்க, அவருக்குக் கொடுக்கிற ஒரே டைட்டில் இந்த படத்தோட டைட்டிலான `ஸ்வீட் ஹார்ட்’ங்கிற பெயர்தான்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel