Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'… வங்கியில் மேனேஜர் பணி; லட்சங்களில் சம்பளம்!

ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வங்கி மற்றும் நிதி துறையில் டிப்ளமோ படிப்பு படிக்க வேண்டும். அதன் பின்னர், 2 மாதங்களுக்கு இன்டர்ன்ஷிப்பும், அடுத்த, 4 மாதங்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படும். இதன் பின்னர், ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி வழங்கப்படும். மொத்த காலிபணியிடங்கள்: 650 வயது வரம்பு: 20 – 25 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ஜூனியர் … Read more

மாநகர அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் குறிப்பேடு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: அரசு பேருந்துகளுக்கான குறிப்பேடுகளை ஆங்கிலத்தில் வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேருந்து வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேடு, பணியைத் தொடங்கும்போது ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த குறிப்பேடு இதுநாள் வரை தமிழில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சில பணிமனைகளில் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து பணிக்கு வருவோருக்கு இதுபோல வழங்குவது ஏற்புடையதல்ல … Read more

கர்நாடக சட்டப்பேரவையில் குட்டி தூக்கம் போட சாய்வு சோபா: பேரவைத் தலைவர் ஏற்பாடு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதிய உணவுக்கு பிறகு எம்எல்ஏக்கள் தூங்குவதற்கு சென்று விடுகின்றனர். இதனை தடுக்க பேரவை வளாகத்திலேயே குட்டி தூக்கம் போடுவதற்கு ஏதுவாக ரிக்லைனர்களை ஏற்பாடு செய்யுமாறு பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 3-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டும் என பேரவைத் தலைவர் யூ.டி.காதர் வலியுறுத்தி உள்ளார். அதேவேளையில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு … Read more

சர் சி.வி.ராமன் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ கோட்பாடு | பிப்.28 – தேசிய அறிவியல் நாள்

இந்திய அறிவியலாளர்கள் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு முதலில் வருபவர் சர் சி.வி.ராமன்தான். அவர் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ கோட்பாடு அறிவியல் உலகின் பல்வேறு ஆய்வுகளுக்கும் கண்டறிதல்களுக்கும் இன்று வரை முன்னத்தி ஏராக உள்ளது. இந்த விளைவை ராமன் எப்படிக் கண்டறிந்தார், தெரியுமா? ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். இயற்கை மீதிருந்த ஆர்வத்தால் வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் ராமன். அவர் பார்த்த மத்திய தரைக் கடல் … Read more

மோசடி பணத்தில் தொடர்பா? ரூ.60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கும் நடிகைகள்!

Famous Actresses Linked to Crypto Scam?: ரூ. 60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகைகளை வைத்து விளம்பரம் செய்ததால், அவர்களுக்கும் தொடர்பா? என போலீசார் விசாரிக்க முடிவு.

சீமான் மீதான பாலியல் வழக்கு : மனைவி கயல்விழி பரபரப்பு பேட்டி

Seeman : சீமானை அசிங்கப்படுத்துவதற்காக காவல்துறை திட்டமிட்டு அதிகார தோரணையுடன் நடந்து கொண்டிருப்பதாக அவரது மனைவி கயல்விழி சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். 

ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்தாகுமா? ஆனால் எந்த அணி அரைஇறுதிக்கு செல்லும்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.  இந்த நிலையில், இன்று மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற சூழ்நிலை உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரை … Read more

2026 முதல் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை குறைக்க மத்திய மோடி அரசு முயற்சி ?

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . இந்த முன்மொழிவு நிதி ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும், மேலும் அங்கீகரிக்கப்பட்டால், மத்திய-மாநில பதட்டங்கள் தீவிரமடையக்கூடும். இந்த மாற்றத்திற்கான காரணங்களாக மத்திய அரசு அதிகரித்த செலவினத் தேவைகளைக் குறிப்பிடுகிறது.” மாநிலங்கள் பெறும் மத்திய வரி வருவாயைக் குறைக்க மோடி அரசு முயல்வதாக மூன்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி … Read more

“தென்மாநிலங்களை தண்டிப்பதை ஏற்கமாட்டோம்!” – பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: “நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்! அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளையொட்டி விடுத்துள்ள செய்தியில், ““பொதுவாக நான் பிறந்தநாளைப் பெரிய அளவில் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், திமுக தொண்டர்கள், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசின் சாதனைகள் மற்றும் கட்சிக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது … Read more