What to watch on Theatre: சப்தம், அகத்தியா, கூரன் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

சப்தம் (தமிழ்) சப்தம் ‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சப்தம்’. ‘ஈரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி – அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமானுஷ்ய புலனாய்வாளர் (paranormal investigator) அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அகத்தியா (தமிழ்) அகத்தியா (தமிழ்) பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’. அர்ஜுன், ராஷி … Read more

ஆதி – நிக்கி கல்ராணி விவாகரத்து என்னும் வதந்தி

சென்னை’ காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு சாமி டைரக்டு செய்த ‘மிருகம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி. பிரபல தெலுங்கு டைரக்டர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் ஆவார். ‘ஈரம், அரவான், மரகத நாணயம், கிளாப்’ ஆகிய படங்களில் ஆதி நடித்து இருக்கிறார். ‘டார்லிங்’  என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு … Read more

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம்

போபால், மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 17 வயது சிறுவன் ஒருவர் மது போதையில் 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் சிறுமியை கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளான். உடலில் ரத்தக்கறைகள் மற்றும் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமியை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

மகளிர் பிரீமியர் லீக்; டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மும்பை (3 வெற்றி, 1 தோல்வி) 6 புள்ளிகளுடன் (+0.780 ரன் ரேட்) முதல் இடத்திலும், டெல்லி (3 … Read more

அமெரிக்கா: கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவியை பார்க்க தந்தைக்கு விசா அனுமதி

மும்பை, இந்தியாவின் மராட்டிய மாநிலம் சடாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நீலம் ஷிண்டே (வயது 35). அமெரிக்காவுக்கு படிப்புக்காக சென்ற இவர், கலிபோர்னியாவில் கடந்த நான்கு வருடங்களாக தங்கியிருக்கிறார். தற்போது இறுதியாண்டு படித்து வரும் நீலம் ஷிண்டே, கடந்த 14-ம் தேதி விபத்தில் சிக்கினார். அதிவேகமாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

6 ஏர்பேக்குடன் பாதுகாப்பான காராக மாறிய மாருதி ஆல்டோ K10

2025 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி ஆல்டோ கே10 காரில் 6 ஏர்பேக்குகளை பெற்ற மாடல் ரூ.6,000-ரூ.16,000 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.4.23 லட்சம் முதல் துவங்குகின்றது. எஞ்சின், தோற்ற அமைப்பு, வசதிகள், மற்றும் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆல்டோ கே10 காரில் தொடர்ந்து 1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm டார்க்கினை 3500 rpmல்  … Read more

Pakistan: “இலவசமாக பயிற்சியளிக்க தயார்; ஆனால் 58 வயதில் என்னால் அவமானப்பட முடியாது" -வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடைபெறும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றிகூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அரங்கேறிய ஐ.சி.சி தொடரில் இப்படியா மோசமாக விளையாடுவது என வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். பாகிஸ்தான் அப்போது, யுவராஜின் தந்தை யோகராஜ் சிங், “தொலைக்காட்சி வர்ணனையில் விமர்சிக்காமல் களத்தில் இறங்கி பயிற்சி கொடுங்கள். உங்களுக்கு இம்ரான் கான் இருந்தது போல இன்றைய பாகிஸ்தான் அணிக்கு … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நெல்லை பயணமும், மொழிக்கொள்கை கருத்தால் எழுந்த அதிர்வலையும்!

நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உற்சாகமாக நிகழ்ச்சிகளில் பேசினார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அவரது வலைதள பதிவு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் வழிபாடு செய்தது குறித்து திருநெல்வேலியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் அவர் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டு பேசும்போது, “திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரை வியாழக்கிழமை தரிசித்தேன். திருச்செந்தூருக்கு நான் வருவது இது 2-வது முறையாகும். … Read more

7 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில் மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு

கலவரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மணிப்பூர் மாநிலத்தில் 104 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட காங்போக்பி, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தவுபால், இம்பால் மேற்கு மற்றும் காக் சிங் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 104 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆயுதங்களை திரும்ப கொடுத்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் … Read more

Skype-க்கு விடை கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்: முழு விவரம்

வாஷிங்டன்: வரும் மே மாதம் 5-ம் தேதி உடன் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2003-ல் ஸ்கைப் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வழி உரையாடல், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் போனில் இதை பயன்படுத்த முடியும். … Read more