Seeman: முதல்வர் ஆசையில் சீமான்.. விசாரணைக்கு பிறகு சீமான் சொன்னது என்ன?

Seeman Press Meet: நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானிடம் சுமார் 1.15 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து அளித்த விளக்கத்தை இங்கு காணலாம். 

`ரஜினி சாரிடம் எங்க அப்பா சொன்ன வார்த்தை..!' – ஜெயம், எம்.குமரன் ரீரிலீஸ் பற்றி இயக்குநர் மோகன் ராஜா

‘ஜெயம்’, ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரீரிலீஸ் ரவி மோகன் அறிமுகமான ‘ஜெயம்’, ”எம் குமரன் s/o மகாலட்சுமி’ படங்கள் இப்போது ரீரிலீஸ் ஆக உள்ளன. எடிட்டர் மோகன் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயம்’. அதைப் போல 2004-ல் ‘எம் குமரன் s/o மகாலட்சுமி’ படமும் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது புத்தம் புது பொலிவாக 4 கே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், … Read more

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது. சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் … Read more

டெல்லி: பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் முன்னிலையில் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை

புதுடெல்லி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவருடைய தலைமையில் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, டெல்லிக்கு நேற்று வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உலக அளவில் அதிக மக்கள் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்; ரோகித் களமிறங்குவது சந்தேகம்..?

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

காசா போர் நிறுத்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்துவது எப்படி? பேச்சுவார்த்தை தொடங்கியது

காசா: இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி காசாவில் போரை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. முழுமையான போர்நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் பணயக் கைதிகளை … Read more

முழுமையான கருப்பு நிற எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம் அறிமுகமானது.!

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காமெட் EV மின்சார பேட்டரி வாகனத்தில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்று பிளாக்ஸ்ட்ராம் எடிசன் விலை ரூ.9.81 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக BAAS எனப்படுகின்ற பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் + ஒரு கிமீ பயணத்துக்கு ரூ. 2.50 காசுகள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்ஸ்ட்ராம் எடிசன் பேட்ஜ், வீல் கவர்கள் மற்றும் ஹூட் பிராண்டிங் மற்றும்  ஸ்கிட் பிளேட்டுகள் போன்றவற்றுடன் சில இடங்களில் சிவப்பு நிற … Read more

Beavers: அணைக்கட்டிய எலிகள்… எந்த நாட்டில் தெரியுமா?

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில், அரசு ஒர் அணை கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய அனுமதி 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம். ’நீங்க என்ன அணை கட்டுறது; நான் கட்டுறேன் பாருங்கடா’ என்கிற ரேஞ்சில், பல நீர் எலிகள் ஒன்று சேர்ந்து அணை கட்டிவிட்டிருக்கிறது. இதனால், செக் குடியரசுக்கு 1.2 மில்லியன் டாலர் சேமிப்பாகி விட்டதாம். beavers (நீர் எலிகள்) நீர் எலிகள், ஆங்கிலத்தில் பீவர்கள் (beavers) என்று அழைக்கப்படும். ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் காணப்படுகின்றன. … Read more

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீஸார் விசாரணை!

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் காவல் துறை வழங்கிய சம்மனை ஏற்று இன்று (பிப்.28) இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணி அளவில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென காவல் துறை சம்மன் அளித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை காவல் துறை மேற்கொண்டுள்ளது. … Read more

பிரதமர் மோடியின் கல்வி சான்று விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி சான்று விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் பிஏ, எம்ஏ பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் … Read more