கடைசி நேரத்தில் வராத மனைவி கயல்விழி… போலீசார் கேட்கும் 53 கேள்விகள் – கைதாகிறாரா சீமான்?

Seeman Latest News: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா… அரையிறுதியில் மோதல்…? அய்யோ பாவம் ஆப்கானிஸ்தான்!

ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் குரூப் – பி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின. முதலில் பேட் செய்து ஆப்கானிஸ்தான் 274 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. ICC Champions Trophy 2025: அய்யோ பாவம் ஆப்கானிஸ்தான் இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 109 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து கனமழையால் போட்டியில் முடிவு … Read more

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்… இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' – தேசிங்கு பெரியசாமி

`ஜோ’ படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்’. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். யுவன் சார் கொடுத்த ஊக்கம்! தேசிங்கு பெரியசாமி பேசுகையில், “ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யுத்ஃபுல்லாக இருக்கு. படத்தினுடைய டிரெய்லரும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சு. நல்ல வைப் இருக்கு. ரியோவுடைய கலர் எனக்கு ரொம்ப … Read more

ரமலான் நோன்பு ஞாயிறு (மார்ச் 2) முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் மார்ச் 2 முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று பிறை தெரியாததை அடுத்து மார்ச் 2 முதல் நோன்பு மேற்கொள்ளப்படும். ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய காலண்டரில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் ஒன்பதாவது மாதமாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாக கருதும் மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிக கடுமையான நோன்பு கடைபபிடிப்பது வழக்கம். புனித ரமலான் … Read more

சத்தீஷ்காரில் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர் கைது

புதுடெல்லி, சத்தீஷ்காரில் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சத்தீஷ்கார் அரசால் தடை செய்யப்பட்ட மூல்வாசி பச்சாவோ மன்ச் (எம்.பி.எம்.) என்ற நக்சல் அமைப்பை சேர்ந்த ரகு மிதியாமி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுபற்றி என்.ஐ.ஏ. அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த தடை செய்யப்பட்ட எம்.பி.எம். என்ற அமைப்பானது நிதி சேகரிப்பு, பதுக்கி வைத்தல் மற்றும் தேச … Read more

சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

லாகூர், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் களம் இறங்கினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து செடிகுல்லா அடல் களம் புகுந்தார். மறுபுறம் இப்ராகிம் … Read more

வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தலிபான் ஆதவு மதகுருமார்கள் மையத்திற்குள் உள்ள ஒரு மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 5 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி … Read more

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் … Read more

எஸ்.பாலசந்திரன் ஓய்வு – வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவராக பி.அமுதா நியமனம்

சென்னை: எஸ்.பாலசந்திரன் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய தென் மண்டல தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற பி.அமுதா, 1991-ம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு பி.எச்டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலச்சந்திரன் ஓய்வு: கடந்த 2016-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பதவி உயர்வு … Read more

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2025 இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, “ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. … Read more