மிரட்டும் அஜித்.. வெளியான 'குட் பேட் அக்லி' டீசர்!

Good Bad Ugly Teaser: அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ-வில் இருக்கும் இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இருகிறது. இரண்டிலும் வென்று அரை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தற்போது மூன்றாவது லீக் போட்டியாக நாளை மறுநாள் (மார்ச் 02) நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.  ரிஷப் பண்ட் எந்த இடத்தில் களம் இறங்குவார்  இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் … Read more

Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ – ஹாரிஸ் கொடுத்த அப்டேட்

கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.  ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது. பிறகு மீண்டும் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் அவ்வப்போது படங்களில் நடித்து, விடுபட்ட காட்சிகளை … Read more

சீமான் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட அழைப்பாணை… ‘கிழிக்கச் சொன்னது நான் தான்’ சீமான் மனைவி பேட்டி…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதன் கடைசி அழைப்பாணையை வழங்க காவல்துறையினர் சீமான் வீட்டுக்கு நேற்று சென்ற நிலையில் அந்த சம்மனை சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றனர். இந்த சம்மன் ஒட்டப்பட்ட உடன் கிழிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது. இதை விசாரிக்க அங்கு … Read more

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டிருந்த 35 வயது பெண்ணை சிறுத்தை கடித்து கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி துஷ்யந்த் குமார் கூறுகையில், சவுதேரி கிராமத்தை சேர்ந்த சுமன் (35) என்ற பெண் நேற்று மாலை காட்டிற்கு சென்று திரும்பி வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று இரவு ஒரு வயலில் … Read more

இன்னும் ஒரே ஒரு அரைசதம்… சாம்பியன்ஸ் டிராபியில் மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி

துபாய், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த … Read more

நீதிபதிகள் நியமனத்தில் சம வாய்ப்பு கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரியப் பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 சதவீத நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் … Read more

“சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினருக்கு உதவுவோர் மீது கடும் நடவடிக்கை” – அமித் ஷா எச்சரிக்கை

புதுடெல்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு உதவுவது தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதால், அத்தகையோர் மீது டெல்லி போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார். டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் … Read more