நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.

இட்லி தயாரிக்க பிளாஸ்டிக்  தாள் பயன்பாடு : கர்நாடகாவில் தடை

பெங்களூரு கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை  தடை செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் 251 இடங்களில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, ஏராளமான ஓட்டல்களில் இட்லியை வேக வைப்பதற்கு துணிகளுக்கு பதில், பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே உடனடியாக கர்நாடகாவில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து … Read more

USA -Ukraine: `சத்தமாக பேசுவதை நிறுத்துங்கள்' – வாக்குவாதத்தில் முடிந்த சந்திப்பு- என்ன நடந்தது?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட… உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மேலும், உக்ரைன் அதிபர் போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார் என்றும், அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் கருதுவதாக தெரிகிறது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிக ஒப்பந்தம் செய்யவும், நட்பு பாராட்டவும் நினைக்கிறார். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ட்ரம்ப் … Read more

இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல – கனிமொழி திட்டவட்டம்

சென்னை: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் பாஜக இல்லை என்றும் அவர் கூறினார். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. … Read more

தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

ஹைதராபாத்: ‘‘புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்’’ என மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார். தேசிய அறிவியல் தினம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அரங்கில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பேசியதாவது: நோபல் பரிசை வென்ற சர். சி.வி. ராமன் அவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ‘ராமன் எஃபக்ட்’ எனும் … Read more

சீமானிடம் ஒரு மணி நேரம் காவல்துறை விசாரணை

சென்னை சீமானிடம் காவல்துறையினர் ஒரு மணி நேர்ம விசாரணை நடத்தி உள்ளனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக … Read more

Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' – உணர்ச்சி வசப்பட்ட சீமான்!

நடிகை கொடுத்த பாலியல் புகாரில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசாரணையை முடித்துவிட்டு நள்ளிரவில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை முழுமையாக இங்கே. Seeman சீமான் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு! சீமான் பேசியதாவது, ‘விளக்கம் கேட்டார்கள். என்னுடைய பதிலை கொடுத்தேன். எதுவும் புதிதில்லை. தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அடுத்தடுத்த சம்மன்கள் கொடுப்பது அடக்குமுறை, அராஜகம். நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க 3 மாத … Read more

பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: மக்களுக்கு அமைச்சர் சக்கரபாணி அழைப்பு

சென்னை: எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்தார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: எரிபொருளை சேமிக்கும் … Read more

ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் நன்கொடை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னபிரசாதம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்காக திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டம் எனும் பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து … Read more

பாகிஸ்தான் மதரஸாவில் குண்டுவெடித்து 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் … Read more