விராட் கோலி உடைக்கப்போகும் 6 மிகப்பெரிய கிரிக்கெட் சாதனைகள்..!

Virat Kohli Records : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு இரு அணிகளும் மோதும் போட்டி தொடங்கும். நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கப்போகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசியாக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி இறுதிவரை சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 100 ரன்களை விளாசினார். அதே பார்மை இந்தப் போட்டியிலும் விராட் கோலி தொடருவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அத்துடன் இந்தப் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடும்பட்சத்தில் 6 மிகப்பெரிய சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த லீக் போட்டி விராட் கோலியின் 300வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை விராட் கோலி இதுவரை 51 சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக மொத்தம் 82 சதங்களையும் பூர்த்தி செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி என்னென்ன சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். 

1. 2வது அதிக ரன்கள் எடுத்த வீரர்

விராட் கோலி இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் 14085 ரன்கள் எடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 150 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரவின் சாதனையை அவர் முறியடிப்பார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி உருவெடுப்பார். குமார் சங்கக்கார இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்துள்ளார்.

2. சிறந்த ஃபீல்டர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்தியர் என்ற சாதனையை வைத்திருந்த முகமது அசாருதீன் சாதனையை முறியடித்துள்ளார். அசாரூதீன் 156 கேட்சுகள் பிடித்திருந்த நிலையில் அந்த சாதனையை விராட் கோலி முறியடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 3 கேட்சுகளை பிடித்தால், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கின் 160 கேட்சுகள் சாதனையை முறியடிப்பார். இதன் மூலம், விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த இரண்டாவது பீல்டர் என்ற சாதனையை படைப்பார். இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மஹிலா ஜெயவர்தனே ஒரு நாள் போட்டிகளில் 218 கேட்சுகளை பிடித்துள்ளார்.

3. சாம்பியன்ஸ் டிராபி ரன்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 651 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி இன்னும் 51 ரன்கள் எடுத்தால், ஷிகர் தவானின் சாதனையை அவர் முறியடிப்பார். சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். ஷிகர் தவான் இந்திய அணிக்காக 10 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடி 701 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் படிங்க: IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவாரா? ஆடினால் எந்த இடத்தில் ஆடுவார்?

4. கிறிஸ் கெயில் சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி 142 ரன்கள் எடுத்தால், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பார், மேலும் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். நான்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடிய கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 791 ரன்கள் எடுத்திருக்கிறார்.

5. நியூசிலாந்துக்கு எதிரான சாதனை

விராட் கோலி நியூசிலாந்திற்கு எதிராக 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1,645 ரன்கள் எடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை போட்டியில் விராட் கோலி இன்னும் 106 ரன்கள் எடுத்தால், சச்சின் டெண்டுல்கரின் 1750 ரன்கள் சாதனையை முறியடிப்பார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை இப்போது சச்சின் வசம் உள்ளது. அந்த சாதனை விராட் கோலி பெயரில் மாறும்.

6. நியூசிலாந்துக்கு எதிராக சதம்

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, ஆறு சதங்களை அடித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். நியூசிலாந்திற்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது வீரேந்தர் சேவாக் மற்றும் ரிக்கி பாண்டிங்குடன் சம நிலையில் உள்ளார்.

மேலும் படிங்க: CSK vs MI: சிஎஸ்கேவை தாக்க ரெடியாகும் மும்பை; கேப்டன் யார்? பிளேயிங் லெவன் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.