ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அளவு ரூ.1.5 கோடிக்கு எகிறியுள்ளது.
என்ன செய்வதென்று தெரியாத ராம்மெஹருக்கு, தான் போட்டிருந்த ஆயுள் காப்பீடு ஞாபகத்திற்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இவருக்குக் கிட்டதட்ட ரூ.1.5 கோடி கிடைக்கும். இதனால் பிளான் ஒன்றைச் செய்துள்ளார்.
பிளான் படி, தன் சாயலைப் போலவே இருக்கும் ராமலுவை 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி மது குடிக்க வைத்துள்ளார் ராம்மெஹர். போதையிலிருந்து ராமலுவைக் கயிறு வைத்து இறுக்கிக் கொன்று, பின்னர் ராமலுவின் உடலைத் தனது காரில் போட்டு, அந்தக் கார் மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முன்பு, ராம்மெஹர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சத்தை எடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த அடுத்த நாளான அக்டோபர் 7-ம் தேதி, ராம்மெஹரின் குடும்பத்தினர் ராம்மெஹர் வீட்டுக்கு ரூ.11 லட்சத்தோடு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் என்றும், அப்போது அவரை ஒரு காரும், இரண்டு பைக்குகளும் பின் தொடர்ந்ததாகத் தங்களிடம் ராம்மெஹர் போனில் கூறியதாகவும், பின்னர், அவர் காரில் எரிந்த நிலையில் காணப்பட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்த நேரத்தில் ராம்மெஹரோ பத்திரமாகச் சத்தீஸ்கர் மாநிலத்திற்குத் தனது இரண்டு பெண் தோழிகளுடன் தப்பித்து சென்றுள்ளார். ஆனால், போலீஸார் விசாரணையில் ராம்மெஹர் உயிரோடு இருப்பது தெரிய வந்து அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். நான்கு ஆண்டுகளாக நடந்துக்கொண்டிருந்த இந்த வழக்கில் தற்போது கூடுதல் நீதிமன்றம் ராம்மெஹருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இறந்த ராமலு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel