தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்த 42 நிர்வாகிகளிடம் கருத்துகேட்ட மேலிட பொறுப்பாளர்

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸை வலிமைப்​படுத்துவது குறித்து கட்சி​யின் 42 நிர்வாகிகளிடம் காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்​தனியே கருத்துகளை கேட்​டறிந்​தார்.

தமிழ்​நாடு காங்​கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மை​யில் 20-க்​கும் மேற்​பட்ட மாவட்ட காங்​கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்​.​திர​வியம் தலைமை​யில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்​வப்​பெருந்​தகையை மாற்​றக்​கோரி கட்சி​யின் தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்​தனர்.
இந்நிலையில், தமிழ்​நாடு காங்​கிரஸின் மேலிட பொறுப்​பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று முன்​தினம் சென்னை வந்தார். அவரை மாநிலத் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, அகில இந்திய காங்​கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே உள்ளிட்​டோர் வரவேற்​றனர்.

அதனைத் தொடர்ந்து கட்சி​யின் முன்​னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.எஸ்​.அழகிரி, கே.வி.தங்​கபாலு, சு.திருநாவுக்​கரசர் மற்றும் காங்​கிரஸ் எம்.பி.க்​கள், எம்எல்​ஏக்​கள், அகில இந்திய செயலா​ளர்கள் உள்ளிட்ட கட்சி​யின் உயர்​மட்ட குழு​வைச் சேர்ந்த 42 பேரை தனித்​தனியே சந்தித்து விவா​தித்​தார். பின்னர் அவர் டெல்லி புறப்​பட்டு சென்​றார்.

செல்​வப்​பெருந்தகை கூறும்​போது, “தமிழகத்​தில் காங்​கிரஸை வளர்ப்​பது, வலிமைப்​படுத்து​வது, 2026 தேர்​தலுக்கு தயாராவது ஆகிய பொருள்​களில் ஆலோசனை நடத்​தப்​பட்​டது. இதில் பங்கேற்ற தலைவர்​கள், கட்சி வளர்ச்சி சார்ந்த கருத்துகளை தெரி​வித்​துள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.