இங்கிலாந்தில் இசைஞானி இளையராஜா முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இளையராஜாவை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து, இருவரும் உரையாடிக் கொண்டனர். “இசைஞானி என்பதை கலைஞர்தான் வைத்தார். அதை மாற்ற முடியவில்லை” என்றார். அதற்கு, “எத்தனை பட்டங்கள் வந்தாலும் இந்த பட்டம் தான் நிற்கிறது.

இசைஞானியாக உலக அளவில் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் குடியிருக்கிறீர்கள். ஜூன் 3 என்ற உங்களுடைய பிறந்த தேதியை ஜூன் 2 என மாற்றிக்கொண்டீர்கள்” எனக் கேட்டார். அப்போது “எல்லாம் அப்பாவுக்காக தான்” என இளையராஜா தெரிவித்தார். அதையடுத்து பேசிய ஸ்டாலின், “எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடல்கள் அடங்கிய சிடியில் பெரும்பாலும் உங்களுடைய இசைதான் உள்ளது. காரில் செல்லும் போது எப்போது அதைதான் கேட்கிறேன்” என உரையாடிக் கொண்டனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8ஆம் தேதி அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று (மார்ச் 2) நேரில் சென்றேன்.

அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில்… pic.twitter.com/bv9AUVxpl0
— M.K.Stalin (@mkstalin) March 2, 2025
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…