இயக்குநர் அறிவழகன் – நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், பிப்ரவரி 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதிதான் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்திற்கு நடிகர் ஆதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” மார்ச் 1ம் தேதி ‘சப்தம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திரைப்படம் வெளியாகாமல் போனது மிகப்பெரிய இழப்புதான். நிறைய இடங்களில் ரசிகர்கள் முன்பதிவு செய்து படம் பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எனது திரைப்பயணத்தில் இதற்கு முன்பு இப்படி நடந்தது கிடையாது. திரைப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை.

இன்று படம் வெளியாகிவிட்டது. நாங்கள் படத்திற்காக புரோமோஷன் எதுவும் செய்யவில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். அதுதான் இந்த படத்திற்கான புரோமோஷன்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…