India vs Australia Head to Head Records: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (மார்ச் 4, செவ்வாய்க்கிழமை) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம் அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 5,புதன்கிழமை) பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளும். அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 லீக் போட்டி
இந்தியா மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி எப்போது, எங்கே நடக்கிறது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரைஇறுதி போட்டி மார்ச் 3, செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறும். டாஸ் மதியம் 2 மணிக்கு (IST) நடைபெறும். போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நேரடி ஒளிபரப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் முதல் அரையிறுதி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 சேனல்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டாரில் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா வெற்றி நிலவரம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 151 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 84 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி நிலவரம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டபடவில்லை.
— 1998: இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (டாக்கா)
— 2000: இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (நைரோபி)
IND vs AUS: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் வெற்றி நிலவரம்
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 5 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 9 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
IND vs AUS: துபாய் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்
துபாயில் உள்ள பிட்ச் அதிக ஸ்கோரிங் எடுக்க சாதகமான சூழல் இல்லை. இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும் போது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs AUS: துபாய் வானிலை அறிவிப்பு
துபாயின் வானிலை முன்னறிவிப்புபடி, வானம் பிரகாசமாக இருக்கும் என்றும், சற்று வெயில் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. மேலும் மழை வர வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இரு அணிகளும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக விளையாடுவார்கள்.
இந்தியா அணி வீரர்கள்
ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம்
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.