ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேசில் உடல் மீட்பு – நடந்தது என்ன?

சண்டிகர்: ஹரி​யானா காங்​கிரஸ் பெண் நிர்​வாகி ஹிமானி நர்வால் மர்மமான முறை​யில் கொலை செய்​யப்​பட்டு உள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே வீசப்​பட்​டிருந்த சூட்​கேசில் இருந்து அவரது உடல் மீட்​கப்​பட்​டது.

ஹரியானா​வின் ரோத்​தக், விஜய் நகர் பகுதியை சேர்ந்​தவர் ஹிமானி நர்வால் (22). சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்​கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். முன்​னாள் முதல்வர் பூபிந்தர் ஹுடா​வின் ஆதரவாளராக​வும் கட்சி​யின் இளம் நிர்​வாகி​யாக​வும் அவர் அறியப்​பட்​டார்.

கடந்த 2023-ம் ஆண்டு காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத ஒற்றுமை (பாரத் ஜோடோ) யாத்​திரை​யில் ஹிமானி நர்வால் பங்கேற்​றார். அப்போது ராகுலுடன் அவர் கைகோத்து நடந்து செல்​லும் புகைப்​படம், வீடியோக்கள் சமூக வலைதளங்​களில் வைரலாக பரவின. இதன்​காரணமாக கட்சி​யில் அவர் மேலும் பிரபலம் அடைந்​தார்.

ஹிமானி நர்வாலின் தாயார் டெல்​லி​யில் வசிக்​கும் நிலை​யில் பாட்​டி​யுடன் அவர் தங்கி​யிருந்​தார். சில ஆண்டு​களுக்கு முன்பு பாட்டி உயிரிழந்த நிலை​யில் ஹிமானி தனியாக வீட்​டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 14-ம் தேதி ஹிமானி தனது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதுதொடர்பான வீடியோ, புகைப்​படங்களை சமூக வலை தளங்​களில் வெளி​யிட்​டார்.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு அவர் ஒரு திருமண விழா​வில் பங்கேற்​றார். அந்த விழா​வில் அவர் நடனமாடிய வீடியோவை​யும் சமூக வலைதளங்​களில் வெளி​யிட்​டார். இதன்​பிறகு அவரை காணவில்​லை.டெல்​லி​யில் தாய் வசிக்​கும் நிலை​யில் ஹிமானியை யாரும் தேடவில்லை என்று கூறப்​படு​கிறது.

இந்த சூழலில் ஹரியானா​வின் ரோத்தக் நகர் சம்பலா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை ஒரு சூட்​கேஸ் கேட்​பாரற்று கிடந்​தது. பொது​மக்​களின் தகவலின்​பேரில் போலீ​ஸார் விரைந்து வந்து சூட்​கேஸை திறந்து பார்த்​தனர். அந்த சூட்​கேசில் இருந்து ஹிமானி நர்வாலின் சடலம் மீட்​கப்​பட்​டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்​பப்​பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: மர்மமான முறை​யில் ஹிமானி நர்வால் கொலை செய்​யப்​பட்டு உள்ளார். சுற்று​வட்டார பகுதி​களில் சுமார் 25 கி.மீ. தொலைவு வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்​களை​யும் ஆய்வு செய்து வருகிறோம். 4 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு உள்ளன. பேருந்து நிறுத்தம் அருகே சூட்​கேசை வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்​தப்​படு​கிறது. ஹிமானி​யின் மூக்​கில் இருந்து ரத்தம் வழிந்​துள்ளது. அவர் பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்​டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய​வரும். இவ்வாறு போலீ​ஸார் தெரி​வித்​தார்.

காங். தலைவர்கள் மீது தாய் குற்றச்சாட்டு: ஹிமானி நர்வாலின் தாய் சவிதா கூறிய​தாவது: எனது மகள் கடந்த 28-ம் தேதி இரவு திருமண விழா​வில் பங்கேற்க சென்​ற​தால் செல்​போனை சுவிட்ச் ஆப் செய்திருக்​கலாம் என்று கருதினேன். தற்போது அவள் கொலை செய்​யப்​பட்​டிருக்கிறாள். எனது மகளின் வளர்ச்சியை பிடிக்காத, காங்​கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எனது மகளை கொலை செய்திருக்​கலாம் என்று சந்தேகிக்​கிறேன். பாரத ஒற்றுமை ​யாத்​திரை​யின்​போது ராகுல் ​காந்​தி​யோடு இணைந்து ஸ்ரீநகர் வரை எனது மகள் பயணம் செய்​தாள். எனது மகளின் ​கொலை​யில் தொடர்பு உடையவர்களை நீ​தி​யின் ​முன்பு நிறுத்த வேண்​டும். இவ்​வாறு ச​விதா தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.