IND vs AUS Champions Trophy Semi-Final: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் 2023 ஒரு நாள் உலக கோப்பை பைனலில் விளையாடியது. அந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்த முறை அரையறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றி இந்திய அணி பைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியிலும் இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியடையவில்லை.
மேலும் படிக்க | Champions Trophy 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்!
ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர் மேட் ஷார்ட்க்கு காயம் ஏற்பட்டது. தற்போது இந்தியாவுடன் அரை இறுதியில் விளையாடவுள்ளதால் ஆஸ்திரேலியா கடைசி நிமிடத்தில் தங்கள் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. காயம் அடைந்த மேட் ஷார்ட்க்கு பதிலாக இடது கை சுழல்பந்து வீச்சாளர் கூப்பர் கோனொலி தற்போது அணியில் சேர்த்துள்ளனர். இவர் பிளேயிங் 11ல் எடுக்கப்பட்டால் இந்திய அணிக்கு பாதகமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
A #ChampionsTrophy match-up for the ages awaits in Dubai
More https://t.co/zQncODM01X pic.twitter.com/K8riIb5qS1
— ICC (@ICC) March 4, 2025
ஆஸ்திரேலியா அணியில் தொடரும் காயம்!
சாம்பியஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகினர். கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகி நிலையில், மிட்சல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். தற்போது மற்றொரு வீரரும் விலகி இருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா
ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் சிறப்பாக விளையாடி தற்போது இந்தியாவுடன் அரை இறுதியில் விளையட உள்ளனர். கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்துடன் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் விளையாடும், தோற்றால் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடும் என்ற சூழல் இருந்தது. இந்தியா நியூஸிலாந்தை வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று அரை இறுதியில் மோதுகின்றன. நாளை தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2வது அரை இறுதியில் விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஸ்பென்சர் ஜான்சன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா, கூப்பர் கோனோலி
மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் வெற்றி நிலவரம்