சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் 3a புரோ மாடல் போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.
இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2), நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன்களை சந்தையில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது நத்திங் போன் 3a வரிசையில் 3a மற்றும் 3a புரோ மாடல் போன் அறிமுகமாகி உள்ளது.
நத்திங் 3a: சிறப்பு அம்சங்கள்
- 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷ் 3 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- மூன்று முறை இயங்குதள அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்டை நத்திங் வழங்குகிறது
- 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- 5,000mAh பேட்டரி
- 50 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- பின்பக்கம் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.24,999 முதல் தொடங்குகிறது. மார்ச் 11-ம் தேதி விற்பனைக்கு வருகிறது