IND vs AUS: சுப்மன் கில் பிடித்த கேட்ச்சால் பரபரப்பு.. எச்சரித்த நடுவர்! வீடியோ வைரல்!

Umpire Warning To Shubman Gill: சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார். இன்று (மார்ச் 4,செவ்வாய்க்கிழமை) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. 

வருண் சக்ரவர்த்தி எடுத்த விக்கெட்

இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் கேட்சை சுப்மன் கில் பிடித்தார். ஹெட் அவுட் ஆனவுடன், டீம் இந்தியா மைதானத்தில் கொண்டாடத் தொடங்கினர் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் நடனமாடினார்கள். இந்தியாவின் தெருக்களில் இருந்து சமூக ஊடகங்கள் வரை, இந்திய அணி ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள் என்றே சொல்லலாம்.

The Big One 

Varun Chakaravarthy gets the wicket of Travis Head

Shubman Gill with a brilliant running catch

Updates https://t.co/HYAJl7biEo#TeamIndia | #INDvAUS | #ChampionsTrophy | @chakaravarthy29 | @ShubmanGill pic.twitter.com/5oJERL9b6S

— BCCI (@BCCI) March 4, 2025

சுப்மன் கில் குறித்த சர்ச்சை

இதற்கிடையில், மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஹெட்டின் கேட்சை பிடித்த பிறகு, சுப்மன் கில்லை நடுவர் எச்சரித்தார். ஆரம்பத்தில் மக்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை. ஆனால் டிவி ரீப்ளே காட்டப்பட்டபோது எல்லாம் தெளிவாகியது. வருணின் பந்தை பிடித்த பிறகு, கில் உடனடியாக தனது கையிலிருந்து பந்தை கீழே வீசிவிட்டு கொண்டாடத் தொடங்கினார்.

ஷுபமன் கில்லை எச்சரித்த நடுவர்

டிராவிஸ் ஹெட்டின் கேட்சை  கேட்ச் பிடிச்சிட்டு சுப்மன் கில் ஸ்டைலாக த்ரோ பண்ணிட்டு கொண்டாட போய்டுவாரு. சுப்மன் கில்லின் இந்த செயலை நடுவர் பார்த்தார். ஹெட் பெவிலியன் திரும்பிய பிறகு, களத்தில் இருந்த நடுவர் கில்லை அழைத்து எச்சரித்தார். பந்தைப் பிடித்த பிறகு சில கணங்கள் அதைக் கையில் வைத்திருக்கச் சொன்னார். கில் நடுவரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார், விஷயம் அங்கேயே முடிந்தது. 

Umpire having chat with Shubman Gill over control on catch. pic.twitter.com/HmhS0DeDYB

— Aashutosh Goswami (@imAashutoshh) March 4, 2025

டிராவிஸ் ஹெட் 39 ரன்களில் அவுட்

டிராவிஸ் ஹெட் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக அற்புதமாக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் அவரால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியவில்லை. வருண் பந்தில் ஆட்டமிழக்கும் முன் அவர் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். இந்தக் காலகட்டத்தில், ஹெட்டின் பேட்டில் இருந்து ஐந்து பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன. 

கூப்பர் கோனொலி ரன் எடுக்காமல் அவுட்

காயமடைந்த மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக அணிக்குள் வந்த கூப்பர் கோனொலியால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. தனது முதல் போட்டியில், ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட போதிலும் அவரால் தனது கணக்கைத் திறக்க முடியவில்லை. முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுலிடம் அவர் கேட்ச் கொடுத்டு அவுட் ஆனார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.