IND vs AUS: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று (மார்ச் 4) மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண கிரிக்கெட் உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறது.
IND vs AUS: சம பலம் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை விட தற்காலத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி (India vs Australia) தான் கிரிக்கெட் ரசிகர்களை கவர்கிறது எனலாம். இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதுதான் இதற்கு முதன்மை காரணம். அதுவும் ஐசிசி தொடர்கள் என்றால் எந்தளவிற்கு கடும் போட்டியை இரு அணிகளும் அளிக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.
IND vs AUS: பழிவாங்க காத்திருக்கும் இந்திய அணி
அந்த வகையில், சொந்த மண்ணில், லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் முன்னிலையில் 2023 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த படுதோல்விக்கு, ஆஸ்திரேலியாவை இன்று பழிதீர்க்க இந்திய அணி (Team India) காத்திருக்கிறது எனலாம். எனவே, இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது எனலாம்.
மேலும் படிக்க | ICC Champion Trophy, India vs Australia | ஆஸ்திரேலியாவை வெற்றி பெற இந்திய அணி செய்யவே கூடாத தவறுகள்..!
IND vs AUS: டிராவிஸ் ஹெட் இல்லை
இந்நிலையில், இந்திய அணிக்கு இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள் (3 Australian Players) பெரியளவில் இன்று தலைவலியாக இருப்பார்கள் எனலாம். அனைவரும் இதில் டிராவிஸ் ஹெட்டை எதிர்பார்ப்பார்கள். டிராவிஸ் ஹெட் (Travis Head) நிச்சயம் இதில் தவிர்க்க முடியாத வீரர். இருப்பினும், இந்திய அணி டிராவிஸ் ஹெட் குறித்து நிறைய விஷயங்களை ஆராயந்திருக்கும், வியூகங்களையும் வகுத்திருக்கும்.
ஆனால், அதிகளவில் டிராவிஸ் ஹெட்டின் மீது கவனம் செலுத்திவிட்டு மற்ற வீரர்களை லேசில் விட்டாலும் பெரிய பிரச்னை ஆகிவிடும். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் (Team Australia) பந்துவீச்சில் சில ஓட்டைகள் இருந்தாலும், பேட்டிங் ஆர்டர் மாஸாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
IND vs AUS: இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்கள்
அந்த வகையில், இந்திய அணி இந்த 3 வீரர்களை களத்தில் நீடிக்கவிடாமல் உடனடியாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அவர்களை ஒவ்வொருவராக இங்கு காணலாம்.
IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்
ஆம், இந்திய அணிக்கு எதிராக அனைத்து பார்மட்களிலும் அதிக ரன்களை குவித்திருப்பவர்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் (Steve Smith) ஒருவர். ஆப்கான் போட்டியில் இவரும் நல்ல ரிதமில் இருந்தார். எனவே, இவரை செட்டிலாக விட்டால் நிச்சயம் பெரிய சதம் காத்திருக்கிறது எனலாம்.
அந்த வகையில், ஜடேஜா ஸ்டீவ் ஸ்மித்தை ஓடிஐ அரங்கில் 2 முறையும், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக 11 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஜடேஜா ஸ்டீவ் ஸ்மித்திற்கு 1003 பந்துகளை வீசி 550 ரன்களையே கொடுத்திருக்கிறார். 3வது இறங்கும் ஸ்டீவ் ஸ்மித் மீது தாக்குதல் தொடுக்க ஜடேஜாவை (Ravindra Jadeja) விரைவில் பந்துவீச வர வைக்கலாம்.
மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் வெற்றி நிலவரம்
IND vs AUS: ஜோஷ் இங்லிஸ்
ஆஸ்திரேலிய அணியில் முரட்டு பார்மில் இருப்பவர் ஜோஷ் இங்கிலிஸ்தான் (Josh Inglis). இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரின் சதம் யாராலும் மறக்க முடியாது. இவரின் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் பெரியளவுக்கு கைத்கொடுத்தன. அந்த வகையில், இவர் களத்திற்கு வந்ததும் வருண் சக்ரவர்த்தியை (Varun Chakaravarthy) எங்கிருந்தாலும் கூப்பிட்டு ஒரு சிறிய ஸ்பெல்லை போடவைக்கலாம்.
இவர் செட்டிலானாலும் பெரிய பிரச்னையே. குல்தீப் யாதவும் இவருக்கு நல்ல மேட்ச் அப்பாக இருப்பார். 5வது வீரராக ஜோஷ் இங்கிலிஸ் இறங்குவார். நிச்சயம் 35வது ஓவருக்கு பின் அதிரடியில் இறங்கும் முன் இவரது விக்கெட்டை கைப்பற்ற வேண்டும்.
IND vs AUS: அலெக்ஸ் கேரி
அனைவரும் மேக்ஸ்வெல்தான் 3வது வீரர் என நினைத்திருப்பீர்கள். மேக்ஸ்வெல் (Glenn Maxwell) நிச்சயம் வருண் சக்ரவர்த்தியிடம் வீழ்ந்துவிடுவார், கவலையே வேண்டாம். அப்போ அலெக்ஸ் கேரி வருணுக்கு அவுட்டாக மாட்டாரா என கேட்க வேண்டாம். ஆனால், அலெக்ஸ் கேரியின் (Alex Carey) ஷாட் செலக்ஷன்கள் வருணிடம் இருந்து தப்பிக்க அவருக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும்.
இங்கிலிஸிற்கு பின் களமிறங்கும் கேரியை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னர் நம்மிடையே இல்லை. எனினும் இவரை எளிமையாக ஒன்று, ரன்கள் ஓடி எடுக்கவிடாமல் சற்று அழுத்தத்தில் போட்டால் இந்திய அணிக்கு பலன் கிடைக்கலாம். இவரும் மேக்ஸ்வெல் அல்லது இங்கிலிஸ் உடன் சேர்ந்து டெத் ஓவரில் இந்திய அணிக்கு தலைவலியை கொடுக்கலாம் என்பதால், டெத் ஓவர்களில் ஷமி மற்றும் ஹர்திக் உடன் வருண், குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) ஆகியோருக்கும் ஓரிரு ஓவர்கள் இருக்கும்படி ரோஹித் சர்மா (Rohit Sharna) பார்த்துக்கொள்வது அவசியம்.
மேலும் படிக்க | Champions Trophy 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்!