இந்தியாவிலிருந்து கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அமெரிக்க எல்லையில் 14,000க்கும் மேற்பட்ட இந்திய குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க மதிப்பீடுகளின்படி, 725,000க்கும் மேற்பட்ட ஆவணமற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுவது குறித்த விசாரணையில், இந்தியாவில் இருந்து மனித கடத்தல் செய்யும் இந்த வலையமைப்பில் ஆயிரக்கணக்கான முகவர்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 4,000 முதல் 4,500 கடத்தல் முகவர்கள் உள்ளதாகவும் அதில் சுமார் 2000 பேர் […]
