சென்னை தங்களுக்கு சிவாஜி இல்லத்தில் பங்கு இல்லை என சிவாஜியின் மகன் ராம்குமார் அறிவித்துள்ளார். ஜகஜால கில்லாடி என்ற படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரத்தை துஷ்யந்த் […]
