டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4×4 MT விற்பனைக்கு வெளியானது

சந்தையில் கிடைக்கின்ற பிரபலமான பிரீமியம் எஸ்யூவி டெயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மாடலில் கூடுதலாக 4×4 MT மாடல் ரூ.46.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையில் உள்ள லெஜெண்டர்  மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் ஆல் வீல் டிரைவ் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளதால் டார்க் 80Nm வரை குறைவாக வெளிப்படுத்துகின்றது.

  • Fortuner Legender 4×2 AT – ₹ 44,11,000
  • Fortuner Legender 4×4 MT – ₹ 46,36,000
  • Fortuner Legender 4×4 AT – ₹ 48,09,000

வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கின்ற லெஜெண்டரில் தொடர்ந்து 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  204hp மற்றும் 420Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இருவிதமாக கிடைக்கின்றது.

கருமையான கிரில் அமைப்புடன் மிக நேர்த்தியான கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து எல்இடி விளக்குகள் பெற்று 18 அங்குல வீல் பெற்று இன்டீரியரில் கருப்பு மற்றும் மரூன் நிற கலவையில் அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.