'புவியீர்ப்பு விசை குறித்து நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது' – ராஜஸ்தான் கவர்னர்

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாபு பாக்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நியூட்டன் புவியீர்ப்பு விசை குறித்து பிற்காலத்தில்தான் பேசினார். ஆனால், நமது வேதங்களில் ஏற்கனவே புவியீர்ப்பு விசை குறித்து கூறப்பட்டுள்ளது. தசம முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் பண்டைய அறிவை அழிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக 1190-களில் நலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது. எனவே, மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிப்பது மட்டுமின்றி, அவர்களை இந்திய அறிவு மற்றும் அறிவியலுடன் இணைப்பது அவசியம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.